உளவுத்துறை தலைமை காவலர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ஊர்மக்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, மாநில உளவுத்துறை பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகேயுள்ள நகலூர் பகுதியை சேர்ந்தவர் மாரசாமி. காவலரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக பர்கூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் அம்மாப்பேட்டை ஆகிய காவல்நிலையங்களில் மாநில உளவுத்துறை பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்திருக்கிறார். மாரசாமிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த காவலர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவலரின் உடலை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், பணிச்சுமை காரணமாக காவலர் உயிரிழந்தாரா அல்ல வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.