பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களுக்கு.. போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்
அதில், மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர் என்றும், பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்துப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான பயணம் குறித்து, அவ்வப்போது ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. காலை, மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது
Next Story