இந்தியாவில் தலைவிரித்தாடும் சீரியஸான பிரச்சினை.. கைவிரித்த ரிசர்வ் வங்கி
சில்லரை விலைகள் அடிப்படையிலான விலைவாசி உயர்வு
ஏப்ரலில் 4.83 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை விலைவாசி உயர்வு ஏப்ரலில் குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலையில் 7.4 சதவீதமாக உச்சமடைந்த சில்லரை
விலைவாசி உயர்வு விகிதம், ஜனவரியில் 5.1 சதவீதமாக சரிந்து, மார்ச்சில் 4.9 சதவீதமாக குறைந்து ஏப்ரலில் 4.83 சதவீதமாக சரிந்துள்ளது.
ஆனால் உணவு பொருட்கள் விலைவாசி உயர்வு, மார்ச்சில் 7.7
சதவீதமாக இருந்து, ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகள் விலை உயர்வு 27.8 சதவீதமாகவும், பருப்பு ரகங்களின் விலை உயர்வு 16.8 சதவீதமாகவும், மாமிசம் மற்றும் மீன் விலை உயர்வு 8.2 சதவீதமாகவும் ஏப்ரலில் அதிகரித்துள்ளது.
உணவு பொருட்கள் விலை உயர்வு விகிதம் அதிக அளவில்
தொடர்வதால், சில்லரை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் கூறியுள்ளார்.
சில்லரை விலைவாசி உயர்வு ஒடிசாவில் அதிகபட்சமாக 7.11 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 4.93 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.