மருத்துவமனை வாசலில் கைக்குழந்தை..கடும் காய்ச்சலில் அம்மா..கண்டுகொள்ளாத சிவகங்கை மருத்துவமனை

x

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஸ்னேகா என்ற பெண் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்ததால், அக்குழந்தையை வேறு இடத்தில் தங்க வைக்க முடியாமல் மருத்துவமனையில் வைத்துள்ளனர். உரிய பாதுகாப்பு இன்றி மருத்துவமனையின் நடைபாதையில் குழந்தை வைக்கப்பட்டுள்ளதால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்கு பாதுகாப்பான இடம் வழங்குமாறு மருத்துவமனையில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்