ஒரேயொரு நோக்கத்துடன் களமிறங்கும் இந்திய அணி

x

மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. தம்புல்லாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரக அணி தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மற்ற 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெறும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகின்றன.


Next Story

மேலும் செய்திகள்