இந்தியா மீது உச்சகட்ட கோபத்தில் ரஷ்யா?வெளியான பரபரப்பு அறிக்கை
இந்திய ஆயுதங்கள், உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான செய்திக்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், உக்ரைனுக்கு திருப்பி விடப்பட்டன என்றும்,
இந்த ஆயுதங்களை வாங்கிய ஐரோப்பிய வாடிக்கையாளர்களே உக்ரைனுக்கு அனுப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இந்தியா மீது ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராய்டர்ஸ் நிறுவனத்தின் இந்த செய்தி, யூகத்தின் அடிப்படையிலானது மட்டும் இன்றி தவறானது என்றும், தீயநோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.ராணுவத் தளவாடங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சர்வதேசக் கடமைகளுக்கு உட்பட்டு இந்தியா செயல்பட்டு வருகிறது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.