பயணிகள் கவனத்திற்கு..! ``மாற்றமில்லை..'' செங்கோட்டை - மதுரை ரயில் வழக்கம்போல் இயங்கும்..!
செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மதுரை ரயில் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை - மதுரை ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சுரங்கப்பாதை பணிகள் நிறைவு பெற்றதால் 8, 9 ஆகிய தேதிகளில் ரயில் வழக்கம்போல் பகல் 12.10 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
Next Story