கார்கில் போரில் எல்லையை காத்தவர்... `ஆபரேஷன் பராக்கிரம்' - பாக்.,ஐ அலறவிட்ட ராணுவ தளபதி மறைவு
1940 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த பத்மநாபன், 1959 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். முதலில் பீரங்கி படையில் இருந்தவர், தனது திறமையால் ராணுவத்தில் உயர் பதவிக்கு உயர்ந்தவர். 1993- 1995-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 15 ஆவது படை பிரிவுக்கு தலைமை தாங்கியவர், கலவரங்களை கட்டுப்படுத்தியவர். இந்திய ராணுவத்தின் நுண்ணறிவு பிரிவு தலைமை அதிகாரியாக பொறுப்பு வகித்த பத்மநாபன், கார்கில் போரில் முக்கிய பங்காற்றியவர்.
2000 ஆம் ஆண்டில் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவர், கார்கில் போரில் தோற்ற பாகிஸ்தானின் அத்துமீறல்களை முறியடித்தவர். மீண்டும் போருக்கு தயார் என்று ஆபரேஷன் பராக்கிரம் என்றதும் பாகிஸ்தான் அஞ்சியது. 2002 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூ சாலையில் வசித்தவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு தென்பிராந்திய ராணுவ அதிகாரி கரன்பீர் சிங் பிரார் அஞ்சலி செலுத்தினார். ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா, ஆட்சியர் சித்தார்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.