இந்தியாவுக்கு முதல் பயணம்..! - அபுதாபி பட்டத்து இளவரசர் - மோடி பேசியது என்ன?

x

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி பட்டத்து இளவரசர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பட்டத்து இளவரசர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். பட்டத்து இளவரசர், பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து துறைகளிலும் கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவது மற்றும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.அணுசக்தி, முக்கிய தாதுக்கள், பசுமை ஹைட்ரஜன், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இதுவரை பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்