`கலாஷ்னிகோவ்'... அதிரடி AK 203... மிரட்டலாக களமிறங்கிய இந்தியா... புதிய சமிக்ஞை; எதிரிகளுக்கு கிலி
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 27,000 ஏ.கே-203 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்துள்ளது. அது பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆத்மநிர்மார் பாரத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு அங்கமாக, 6.1 லட்சம் ஏ.கே - 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, ரஷ்யாவின் ரோசோபோரென் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன், இந்திய ஆயுதங்கள் உற்பத்தி வாரியம், கடந்த 2019-ம் ஆண்டு ரூ. 5 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் செய்தது.
உலகப் புகழ் பெற்ற ஏ.கே 47 ரக துப்பாக்கியை உருவாக்கிய கலிஸ்னிக்கேவ் நிறுவனம் பின்னர் ரோசோபோரென் எக்ஸ்போர்ட நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது குறிப்பிடட்தக்கது. ஏ.கே என்பது அரிமோ கலிஸ்நிக்கோவ் என்ற அதன் கண்டுபிடிப்பாளரின் பெயர் சுருக்கம் ஆகும்.
இதற்காக, இந்தோ - ரஷ்யன் அசால்ட் ரைபில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன் தொழிற்சாலை உத்தர பிரதேச மாநிலம் கொர்வா பகுதியில் கட்டமைக்கப்பட்டது.
முதல் 70,000 ஏ.கே - 203 ரக துப்பாக்கிகள் உற்பத்தியில், உள்நாட்டு உதரி பாகங்களின் விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக படிப்படியாக அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பிறகு 100 சதவீதம் உள்நாட்டு உதிரி பாகங்களை பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் போரின் விளைவாக, ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதித்த பொருளாதார தடைகளினால் இந்தியாவில் இதன் உற்பத்தி தாமதமானது.
இந்நிலையில், 27,000 ஏ.கே - 203 ரக துப்பாக்கிகள் முதல் கட்டமாக இந்திய ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த இரண்டு வாரங்களில் 8,000 துப்பாக்கிகள் அளிக்கப்பட உள்ளன. இவற்றில் உள்நாட்டு உதிரி பாகங்களின் விகிதம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.