நாடே தலைவணங்கிய சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கொடி... தமிழ் மண்ணிலிருந்து செங்கோட்டையில்

x

நாடே தலைவணங்கிய சுதந்திர

இந்தியாவின் முதல் தேசிய கொடி

தமிழ் மண்ணிலிருந்து செங்கோட்டையில்

ஒவ்வொரு தமிழனும் மார்தட்டி

கொள்ளும் வீர வரலாறு

டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி, நம் தமிழர்களின் கையால் நெய்து கொடுக்கப்பட்டதாம்... இதன் சுவாரஸ்யத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் டெல்லி செங்கோட்டையிலும், சென்னை ஜார்ஜ் கோட்டையிலும் பட்டொளி வீசி பறந்த தேசிய கோடி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் நெய்யப்பட்டதாம்...

1947.... போராடி சுதந்திரம் பெற்று அனைவரும் களிப்பில் இருந்த காலம்...

அப்போதுதான் இந்தியாவுக்கான தேசிய கொடியை பலர் பல வண்ணங்களில் உருவாக்கி கொடுக்க, அதில் எந்த வண்ணங்களால் இந்தியாவுக்கு வடிவம் கொடுக்கலாம் என அப்போதைய தலைவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்..இறுதியாக, ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், மகாத்மா காந்தியின் முன்னிலையில் பிங்கிலி வெங்கையா என்பவர், சில மாற்றங்கள் செய்து உருவாக்கி கொடுத்த கொடியை பயன்படுத்துவது என இந்திய அரசியல் நிர்ணய சபை கூடி முடிவெடுத்தது..அப்போது அறிமுகம் செய்யப்பட்டதுதான் நம் இந்தியாவின் தற்போதைய மூவர்ண தேசிய கொடி...

அறிமுகம் செய்து வைத்த அடுத்த கணமே, தேசிய கொடியை எங்கு தயாரிப்பது?... யார் தயாரிப்பது? என கேள்வி எழுந்தது...

ஏனென்றால், சுதந்திர இந்தியாவின் முதன் முதலாக... அதுவும் டெல்லி செங்கோட்டையில் ஏறப்போகும் கொடி என்ற நிலையில், அனைவரும் தீர்க்கமாக கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்...கதரா? அல்ல கையால் நெசவு செய்தா? என கேள்வி எழுந்தபோது, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த நம் மக்களின் பொற்கரங்களால் கொடி நெய்யப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது..

உடனே அக்கொடியை தயார் செய்து கொடுக்க, நெசவு தொழிலுக்கு பெயர்போன நம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் பகுதி நெசவாளர்களையும் தேர்வு செய்கின்றனர்...

இதில் வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவரான கோட்டா ஆர். வெங்கடாச்சலுமும், அவரின் மனைவி முனிரத்தினம் அம்மாளும் முதலில் ஒப்புக்கொண்டு நெய்து கொடுத்தனர்..

இவர்கள் நெய்து கொடுத்த கொடியை, மிக குறுகிய காலத்தில் கைத்தறியில் தயாரிக்கும் பணியும் தொடங்கியது...

இதில், பல்வேறு தரப்பட்ட மக்களும் பணியாற்றி, 12 அடி அகலத்திலும், 18 அடி நீளத்திலும் மிக பிரமாண்டமான வகையில், கம்பீரமாக 3 கொடியை வடிவமைத்து கொடுக்கிறார்கள்..அந்த தேசியக்கொடிகளில் ஒன்றுதான் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால், டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்