"தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு" - நீதிபதிகள் வேதனை | நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றபடுவதில்லை இதனை ஏற்ற கொள்ள முடியாது- நீதிபதிகள்.
நீதிமன்றம் ஆக்கிரம்புகளை அகற்ற உத்தரவிட்ட பகுதிகளை இரண்டு மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கன்னியாகுமரியை சேர்ந்த சுவாமிதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு...
"கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் செல்கிறது இந்த கால்வாய் 16 கிலோமீட்டர் வரை சென்று சுசித்திரம் கால்வாய் உடன் இணைகின்றது.
இந்த கால்வாயில் இரு புறங்களிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இந்த கால்வாய் நாகர்கோயில் மக்களின் பிரதான நீர் ஆதாரமாக திகழ்கின்றது இந்த கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக மழை நீர் வடிந்து செல்வதற்கு பிரச்சனையாக சூழல் நிலவுகிறது எனவே இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வை முன்பு விசாரணைக்கு வந்தது
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்தனர்
இதனை ஏற்க மறுத்த நீதிபதி தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் , அரசு நிலங்கள், பொறம்போக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டாலும் சட்ட
ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றபடுவதில்லை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும் அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைகின்றது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு அரசு இடங்கள் ஆக்கிரமப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது.
எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் உத்தரவிட்டனர்.