செவிலியர்களுக்கான ஊக்க மதிப்பெண்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் சார்பில், 986 மருந்தாளுநர்கள் பணிக்கு கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வு நடந்த நிலையில், கொரோனா காலத்தில் பணியில் இருந்த மருந்தாளுநர்களுக்கு 5 மதிப்பெண் ஊக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சென்னை பட்டாபிராமை சேர்ந்த கமலகண்ணன் என்பவர், கொரோனா காலத்தில் பணியாற்றிய தனக்கு ஊக்க மதிப்பெண் வழங்கவில்லை என கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டார். இதை விசாரித்த நீதிமன்றம், மருந்தாளுநர்கள் பணி நியமனம் தொடர்பாக உத்தரவுகளை பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்