ராமர் கோயில் திறப்பு.. திமுக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ராமர்கோவில் திறப்பு குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக திமுக பிரமுகரின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டனர்...
அயோத்தி ராமர் கோவில் திறப்பு குறித்து, திமுக சட்ட திருத்தக் குழு உறுப்பினர், தென்றல் செல்வராஜ் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த பாஜகவினர் பொள்ளாச்சியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு ராமர் பாடல்களை பாடினர். அப்போது, அங்கு வந்த திமுகவினர் பெரியாரின் புத்தகத்தை காண்பித்து கோஷம் எழுப்பினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், 30க்கும் மேற்பட்ட பாஜக வினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனிடையே, திமுக நிர்வாகியின் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினரை, சிறையில் அடைக்க கோரி திமுகவினர் பொள்ளாச்சி-கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
Inauguration of Ram temple.. DMK leaders' house besieged by BJP