செய்தியாளர் சந்திப்பு நடுவே எச்.ராஜா ஆவேசம்

x

செய்தியாளர் சந்திப்பு நடுவே எச்.ராஜா ஆவேசம்

செய்தியாளர் சந்திப்பின்போது மகாபாரதம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல், கெட் அவுட் என்று கூறி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கோபமாக வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் பாஜகவின் ஆன்மீக மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக

தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்று ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மகாபாரதம் குறித்து கேள்வி எழுப்பியதும் கோபமடைந்தார். உடனே, கேள்வி

எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து கண்டனம் தெரிவிப்பதாக கூறிய எச்.ராஜா, கெட் அவுட் எனக்கூறி எழுந்து செல்ல புறப்பட்டார். பின்னர்

தொடர்ந்து மகாபாரதம் புனைவு என்பீர்களா? என்றும், நீங்கள் கிறிஸ்தவரா? என்றும் கேள்வி எழுப்பி ஆக்ரோசமாக பேசினார். அப்போது,

அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகளும் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்