"நடராஜர் கோயிலில்.." - அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிதாக கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ளதா என கேட்டு பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா என அறநிலையத்துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயிலின் தெற்கு கோபுர பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளதா என கேட்டு அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் கட்டுமானத்திற்கு முன் அனுமதி பெறப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்களை அனுப்பவும், அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story