வெளியான நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் ரிப்போர்ட்... அடித்து சொன்ன IMF..

x

2024இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்ற முன் கணிப்பை ஐ.நா திருத்தி அமைத்து, 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மார்ச் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக உச்சமடைந்ததுள்ளதால், முன் கணிப்பை உயர்த்தியுள்ளது. தனி நபர்களின் நுகர்வு அதிகரிப்பு மற்றும் பொதுத் துறை முதலீடுகள் அதிகரிப்பு காரணமாக, பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகம் பெற்று வருவதாக கூறியுள்ளது. பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மந்தமாக இருந்தாலும், மருந்து பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் ஏற்றுமதி வெகுவாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. 2025இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் வளரும் என்று கணித்துள்ளது. அதே சமயத்தில் சீனப் பொருளாதார வளர்ச்சி 2024இல் 4.8 சதவீதமாகவும், 2025இல் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பிரகாசமான புள்ளியாக உள்ளதாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்