இளையராஜா பாடல்கள் தொடர்பான கருத்துரிமை விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு வாதம்
#ilayaraja #ilayarajasongs #musicrights #chennaihc #thanthitv
காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்தாகவும், மற்றபடி, தான் நீதிமன்றத்தை மதித்து நடக்க கூடிய நபர் என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகு, காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர்களிடம் உரிமம் பெற்று,
இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே, எக்கோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காப்புரிமை விவகாரத்தில் தனது உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவித்ததாக இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. மற்றபடி, நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்க கூடிய நபர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.