வந்த திடீர் அறிவிப்பு.. சென்னையில் இளையராஜா கச்சேரி

x

சென்னையில் ஜூலை 14ஆம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் இசை கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில் வரும் ஜூலை 14 ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 1000 ரூபாய் தொடங்கி 3000, 6000, 10 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்படும் எனவும், கச்சேரியில் இளையராஜா 55 முதல் 60 பாடல்களை பாட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாலை 6.45 மணிக்கு கச்சேரி தொடங்கும் எனவும், கார் பார்க்கிங், அனைத்து அரங்கிலும் மொபைல் கழிவறை, செவிலியர்கள், ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும் என தனியார் நிறுவனம் உறுதி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்