ஆள் தெரியாமல் டாப் IAS அதிகாரியின் ரிலேஷனிடமே மோதிய இன்னொரு அதிகாரி..பின்னணியில் அரசியல் பிரமுகர்..?
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி உறவினரிடம்
லஞ்சம் கேட்டதாக மாநகராட்சி மண்டல
அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேர் பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி
அபூர்வாவின் உறவினர் வீடு உள்ளது. அதனை
மறுசீரமைப்பதற்காக 50க்கும் மேற்பட்ட ஜாக்கிகள்
மூலம் வீட்டின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன. இதற்கு உரிய அனுமதி
பெறவில்லை என்று கூறி நடவடிக்கை எடுக்காமல்
இருக்க அம்பத்துார் மண்டல 89-வது வார்டு உதவி
பொறியாளர் ஸ்ரீதரன் என்பவர் 5 ஆயிரம் ரூபாய்
லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த
புகாரின் பேரில் அவர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. அரசியல் பிரமுகர் ஒருவரின்
அழுத்தத்தின் காரணமாகவே தான் லஞ்சம்
கேட்டதாக உதவி பொறியாளர் ஸ்ரீதரன்
தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Next Story