அந்தரங்க வீடியோவை ரிலீஸ் பண்ணுவேன்..! மனைவியை டார்ச்சர் செய்யும் கணவன்.. கலெக்டரிடம் பெண் புகார்
கருணை கொலை செய்ய கோரி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் புகார் அளித்த கர்ப்பிணியால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் அளித்த புகாரில், பெரியதச்சூரைசேர்ந்த தனது கணவர் தேவநாதன், எந்த வேலைக்கும் செல்லாமல், அவர் குறிப்பிடும் செல்போன் எண்ணில் தன்னை ஆபாசமான பேசுமாறும் வற்புறுத்துவதாகவும், இல்லையெனில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் குறிப்ட்டார். இது குறித்து உரிய விசாரணை செய்து, தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்
Next Story