"இனிமேல் தவறு செய்ய மாட்டேன்..." காவல் துறையில் உறுதியளித்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்!

x

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து, திருந்தி வாழப்போவதாக உயரதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையை பூர்விகமாக கொண்ட ரவுடி வரிச்சூர் செல்வம் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல்,கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் பல முறை சிறை சென்ற நிலையில், திடீரென ரவுடியிசத்தை விட்டு திருந்தி வாழப்போவதாக காவல் துறையிடம் கடிதம் கொடுத்திருந்தார். இதற்கிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னையில் தன் கூட்டாளியை கொன்ற வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை கடந்த ஜூன் மாதம் ஐஜி அஷ்ரா கார்க் தலைமையிலான விருதுநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த அவர், காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தன்னைக் கைது செய்த வடக்கு கூடுதல் ஆணையர் அஷ்ரா கார்க்கை சந்தித்துப் பேசியுள்ளார். அவரிடம் ரவுடியிசத்தை விட்டு திருந்தி வாழ போவதாகவும், இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் எனவும் உறுதியளித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது"I will not make mistakes again..." The famous rowdy Varichiyur Selvam promised the police department!


Next Story

மேலும் செய்திகள்