"நல்லா பேசிட்டு வெளியே வந்தேன்.. ஒரு நொடியில இறங்கி உசுரே போச்சு" - கதறிய தங்கச்சி.. சிக்கலில் பிரைவேட் ஹாஸ்பிடல்?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆவணம் பகுதியை சேர்ந்தவர் சதாம். 31 வயதான இவர், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சதாம், திடீரென உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சியடைய செய்தது. இது குறித்து உறவினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இளைஞரின் சிகிச்சைக்கான செலவை செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்திய நிலையில், இரு தரப்புக்கிடையும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையாலையே இளைஞர் உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.