மனைவி தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மனைவியை அடித்து கொலை செய்த கணவர், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லநத்தம் மலை அடிவாரத்தில் அடி பெருமாள் கோயில் அருகே அருணாச்சலம், ரத்தினம் தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அருணாச்சலம், மனைவி ரத்தினத்தின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அருணாச்சலம், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனதெரிய வந்துள்ளது.
Next Story