மனைவி இறந்த மறு கணம்...மடியிலே பிரிந்த கணவன் உயிர் - கல்யாண மேடை முதல் தகன மேடை வரை..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ், தேவகி தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தேவராஜ் 80 வயதை கடந்தும், முள்ளங்கி மற்றும் தேங்காய் ஆகியவைகளை சைக்கிள் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரது மனைவி தேவகி திடீரென இறந்து விட்டார். அப்போது மனைவியின் உடலை பார்த்து தேவராஜும் நிகழ்விடத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளான உறவினர்கள், சாவிலும் இணைபிரியாத முதிர்ந்த வயதுடைய தம்பதியர் இருவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்....