மருத்துவமனையில் பினாயில் குடித்து கணவர் தற்கொலை

x
  • திருப்பத்தூரில் மனைவியின் உறவினர்கள் தாக்கியதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர், பினாயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • திருப்பத்தூர் மாவட்டம், ஆலமரத்து வட்டம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அகமதுவுக்கும், தபசம் என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பிடம் ஷேக் அகமது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, மனைவி மற்றும் அவரின் உறவினர்கள் ஷேக் அகமதுவை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கியதாக தெரிகிறது.
  • இதில் காயமடைந்த ஷேக் அகமது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள கழிப்பறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்