கிணற்றுக்குள் நீச்சல் பழகும்போது கணவன், மனைவி பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செங்கோடு அருகே பன்னீர்குத்திபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரிக்கு, வீட்டின் அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரது உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story