ஹெச்.ராஜாவின் பரபரப்பு குற்றச்சாட்டு... "உண்மை இதுதான்" - சென்னை மெட்ரோ விளக்கம்

x

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன மூத்த அலுவலர்களுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தவறான கருத்துகளை தெரிவித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள இடத்தில் துர்கை அம்மன் கோயில் மற்றும் ரத்ன விநாயகர் கோயில் ஆகியவற்றை தேவையில்லாமல் இடிக்க இருப்பதாக எச்.ராஜா தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் அதன் உயர் அலுவலர்களை குற்றம்சாட்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக, சுரங்கப்பாதை கட்டுமான வடிவமைப்பின் கட்டுப்பாடுகள் காரணத்தினால் இடமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும், பொதுமக்கள் பெருமளவில் பயன்பெரும் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உரிய மதிப்பளித்து செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவிப்பதாகவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்