"அறுவை சிகிச்சைக்கு பின் தோனி எப்படி இருக்கிறார்?" மனைவி சாக்ஷி சொன்ன தகவல்
தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக, அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். முழங்கால் காயத்தால் ஐபிஎல் தொடரின் போது அவதிப்பட்ட தோனிக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்ஜிஎம் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்த சாக்ஷியிடம், தோனியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தோனி நலமுடன் இருக்கிறார் என்றும், குணமடைந்து வருவதாகவும் சாக்ஷி பதில் அளித்தார்.
Next Story