மின்கம்பியில் சிக்கி, தீப்பற்றி உயிருக்கு போராடிய நபர் - பரபரப்புக் காட்சி
ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் கணேஷா காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் சீனிவாசன் என்பவரது வீட்டில் சோலார் பேனல் பொருத்த மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, கால்தவறி வீட்டை ஒட்டி சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது விழுந்துள்ளார். இதில் அவரது கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் மின்சார ஒயர் சிக்கி கொண்டு தீப்பிடித்தது. மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி துடிதுடித்த நிலையில், அங்கிருந்தவர்கள் மர ஏணி மூலம் அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். 60 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட பிரேம்குமார், ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கட்டடங்களை ஒட்டி மின் கம்பிகள் செல்வதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரேம்குமார் மின்கம்பியில் சிக்கியபோது, தீ பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.