அநாகரிகம் செய்த ஆசிரியை...வெறிகொண்டு தாக்கிய PT சார் - மாணவிக்கு நேர்ந்த நிலை...பகீர் பின்னணி
ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக, மாணவி ஒருவரை, சாலையிலேயே வைத்து வாலிபால் பயிற்சியாளர் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க செய்துள்ளது. இதன் பின்னணி என்ன பார்க்கலாம் விரிவாக...
மாணவி ஒருவரை பாரபட்சமின்றி சாலையிலேயே வைத்து அடித்து துன்புறுத்திய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தான் இவை....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்தன.
ஒசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கேற்று வெற்றி பெற்று, வெற்றி களைப்பில் இருந்த போது தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது..
அந்த சமயத்தில், போட்டி நடந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் கைக்கடிகாரம் காணாமல் போனதாக கூறப்படுகிறது...
இந்நிலையில், போட்டி முடிந்து வெளியேறிய போது கீழே கிடந்த கைக்கடிகாரம் ஒன்றை வெற்றி பெற்ற குழுவை சேர்ந்த மாணவி ஒருவர் எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது...
இதனை கவனித்த அப்பள்ளி ஆசிரியை, தனது கைக்கடிகாரத்தை, அம்மாணவி திருடி விட்டதாக வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்..
மாணவியை வசைபாடியதோடு, உடன் வந்த பயிற்சியாளர்களையும் திட்டியதாக கூறப்படுகிறது..
மாணவிகளுடன் வந்த பயிற்சியாளர் தியாகராஜன் தரப்பில், புது கைக்கடிகாரம் வாங்கித் தருவதாக சமாதானப்படுத்தியும் அந்த ஆசிரியை அநாகரீகமான வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது..
இதனால் கடுங்கோபத்தில் இருந்த தியாகராஜன், மாணவியை சாலையிலேயே வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார்.