ஓசூர் அருகே ஏரியில் கவிழ்ந்த கார்.. அதிகரித்த பலி எண்ணிக்கை

x

பாகலூர் வெங்கடாபுரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, ஏரிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காருக்குள் இருந்தபடியே நீரில் மூழ்கி, மகேஷ், லிண்டோ ஆகிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற மீட்பு பணியின் போது, யோகேஸ்வரன் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. நண்பர்கள் மூவரும், ரிலாக்ஸ்சேசனுக்காக ஏரிக்கரையோரம் கார் ஓட்டிய போது, இந்த விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்