தவறிய உறவில் ராஜபோகம்..தடுத்தும் கேட்காமல் தினமும் விருந்து - கடைசி விருந்தில் பிரிந்த உயிர்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கல்குவாரியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஓசூர் அருகேயுள்ள முத்துராயன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவர் கடந்த 6 ஆம் தேதி ஒசஹள்ளி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், முத்துமணி கொலை செய்யப்பட்டது தெரியவர, சம்பவத்தன்று முத்துமணியுடன் மது அருந்திய சரவணன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துராயன் கொட்டாயை சேர்ந்த கருப்பன் என்பவரின் உறவினப் பெண் ஒருவருடன், முத்துமணி தகாத உறவில் இருந்ததாகவும், தகாத உறவை கைவிடுமாறு பலமுறை கண்டித்தும் கேட்காததால் கருப்பன் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சம்பவத்தன்று மது அருந்த அழைத்து, முத்துமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சரவணன், முத்துக்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாயிருக்கும் கருப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்