சத்தமே இல்லாமல் எல்லையை தாண்டிய வங்கதேச இளைஞர்.. விசாரணையில் தெரிந்த திடுக் தகவல்

x

பாஸ்போர்ட் இல்லாமல் ஓசூரில் தங்கியிருந்த வங்கதேச இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேச நாட்டை சேர்ந்த சாஹுனூர் மொல்லா என்பவர், ஓசூரில் சர்ஜாத் பாஷா என்பவரது வீட்டில் கடந்த 2 மாதமாக வாடகைக்கு தங்கியுள்ளார். இவருடன் வங்கதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தங்கியிருந்த நிலையில், தன்னை அந்த இளைஞர் கடத்தி வந்துள்ளதாக பெங்களூருவில் உள்ள தன்னார்வ அமைப்பிடம் புகார் கூறியுள்ளார். பின்னர் ஆவலப்பள்ளி விஏஓ நேத்ரா மூலமாக மறைமுகமாக விசாரணை நடத்தியதில், இளைஞர் சாஹினுார் மொல்லா, தான் காதலித்து வந்த சிறுமியை பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் மேற்கு வங்கம் மாநில எல்லை வழியாக ஓசூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போலீசார், சிறுமியை ஓசூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்