அடுத்தடுத்து வெடித்து சிதறல்..13 பலி.8 பேருக்கு என்ன ஆச்சுனு தெரியல.சோகத்தில் திக்கி பேசிய இளைஞர்

x

ஓசூர் - கர்நாடக மாநில எல்லையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் அரூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பாலாஜி டிரேடர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வந்தது. இந்த கடையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 10 இளைஞர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று பட்டாசு கடை உரிமையாளர் நவீன் உட்பட தொழிலாளர்கள் அனைவரும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடைக்குள் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கடைக்குள் இருந்த குடோனில் வாலிபர்கள் சிலர் பட்டாசுகளை அடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சிலர் சிறிய காயத்துடன் வெளியே ஓடி உயிர் தப்பிய நிலையில், உள்ள சிக்கிய 13 பேர் உயிரிழந்தனர். இதில் அரூர் அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தின் போது, கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்டைனர் லாரி உள்பட 6 வாகனங்கள் சேதம் அடைந்தனர்.இந்த விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்