புல்லட் திருட்டு...பள்ளத்தில் பாய்ந்த பஸ்... ரோட்டில் கிடந்த உடல்... `பலி' வாங்கிய கர்மா...

x

ஓசூர், தட்டகாணப்பள்ளி கிராமத்தில் சேகர் என்பவர் சாவியோடு புல்லட்டை நிறுத்திவிட்டு மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை கட்டுவதற்காக சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட 3 பேரில் ஒருவர் புல்லட்டை திருடிக்கொண்டு வேகமாக சென்றுள்ளார். மற்ற இருவர் பின்னால் சென்றுள்ளனர். திருட்டு புல்லட்டில் சென்றவர் கெலவரப்பள்ளி அணை அருகே அரசு பேருந்து மீது நேராக மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவருடன் வந்த இருவரும் கதறி அழுதனர். திருட்டு சம்பவம் தெரியவந்ததும், சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்த உள்ளூர் மக்கள், திருடனோடு வந்த 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சடலைத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பது தெரியவந்துள்ளது. ஓசூரில் தங்கியிருந்து அங்கிருக்கும் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் குடிபோதையில் புல்லட்டை திருடி சென்றிருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. மற்ற இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்