பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும் போதே வயிற்றுக்குள் நடந்த பயங்கரம்...ICU-வில் நடுங்கி நின்ற டாக்டர்கள்
பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும் போதே வயிற்றுக்குள் நடந்த பயங்கரம்...ICU-வில் நடுங்கி நின்ற டாக்டர்கள்
ஒசூர் அருகே பெண்ணிற்கு கிட்னியில் கல் அகற்ற முயன்ற போது, மருத்துவ சாதனம் கிட்னியிலேயே சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
வயிற்றுவலியால் அவதிப்பட்ட பெண், அடுத்தடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவதிக்குள்ளான சம்பவம் ஒசூரில் அரங்கேறியுள்ளது.
ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. 46 வயதான இவர், தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்றுவலி என சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் 9 மில்லி மீட்டர் அளவில் கிட்னியில் கல் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் கடந்த ஜூலை 23ம் தேதியன்று இரவு 11 மணியளவில் ஸ்டோன் பேஸ்கெட் எனும் சாதனத்தை சிறுநீர் குழாய் வழியாக செலுத்தி, சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் நோக்கில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
ஆனால் அங்கு தான் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறுநீர் குழாய் வழியாக செலுத்தப்பட்ட ஸ்டோன் பேஸ்கெட் சாதனம் உடைந்து கிட்னியிலேயே சிக்கிக் கொண்டதாக கூறி அவசர அவசரமாக அசோக் மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவருமான அசோக் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
வேறு வழியின்றி, அங்கு சென்று ஜெயலட்சுமிக்கு ஓபன் சர்ஜரி செய்து பேஸ்கட் அகற்றப்பட்டதாகவும், மருத்துவர் அசோக் செய்த தவறான சிகிச்சையால் சிறுநீர் தானாக வெளியேறுவதோடு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அவரது உறவினர்கள்...
மருத்துவமனை சார்பில் விசாரித்த போது, கிட்னியில் இருந்தது கல் அல்ல, கூடுதல் தசை என சிகிச்சையின் போது தான் தெரியவந்ததாக கூறுகின்றனர்.
உரியமுறையில் நிபுணர்களின் பரிந்துரையில் தான் சிகிச்சை நடைபெற்றதாகவும், தவறான சிகிச்சை ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவர் பதிலளித்துள்ளார்.
மருத்துவர்களை நம்பி மருத்துவமனைகளை நாடிச் சென்று லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து சிகிச்சை மேற்கொள்ளும் மக்களை விழி பிதுங்க செய்துள்ளது இச்சம்பவம்...