கொஞ்சம் ஸ்லிப் ஆனா உயிருக்கே பேராபத்து... மிதக்கும் ஒவ்வொரு நொடியும் நோ கேரண்டி - திக் திக் பயணம்

x

கொஞ்சம் ஸ்லிப் ஆனா உயிருக்கே பேராபத்து

மிதக்கும் ஒவ்வொரு நொடியும் நோ கேரண்டி

தமிழகத்தில் யாரும் அறியா திக் திக் பயணம்

தருமபுரி அருகே மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி, ஆபத்தான முறையில் மேற்கொள்ளப்படும் பரிசல் பயணம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.....

ஆழமான நீர்ப்பகுதிகளில் துடுப்பு போட்டபடி மேற்கொள்ளும் பரிசல் பயணங்களை 70களில் தொடங்கி 90கள் வரை திரைப்படத்தில் மட்டுமே கண்டிருப்போம்...

ப்ரீத்.... (வைதேகி காத்திருந்தாள் படம், முதல் மரியாதை உள்ளிட்ட காட்சிகளை வைத்துக் கொள்ளவும்)

ஆனால் தருமபுரி மாவட்டம் பக்கம் சென்றால் இன்றளவும் பல இடங்களில் இந்த பரிசல் பயணங்களை காண முடியும்...

குறிப்பாக தருமபுரி, சேலம் இடையே காவிரி ஆறு செல்வதால், மேட்டூர் நீர் தேக்க பகுதிகளில் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல மக்கள் பிரதானமாக பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒகேனக்கல் பரிசல் துறை, ஒட்டனுர் பரிசல் துறை, நாகமரை பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் பரிசல் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

நீர்தேக்கப் பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு நீர் இருக்கும் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிறது..

இப்படி இருக்க, தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வர, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் பயணங்களுக்கு தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்...

ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் தடையையும் மீறி, ஒட்டனுர் பரிசல் துறை, நாகமரை பரிசல் துறை பகுதிகளில் வழக்கம் போல் நடந்து வருகிறது பரிசல் பயணம்...

அதிலும், ஒரு பரிசலில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் அதன் உரிமையாளரையும் சுமந்து செல்வது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பயணம் மேற்கொள்ளும் ஒருவருக்கு கூட லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர் கவசம் அளிக்கப்படாததோடு, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போதைய சூழலில் நீர்தேக்க பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதோடு, வேகமாக பாய்ந்தோடும் நீரில் ராட்சத மரங்களும் அடித்து செல்லப்படுகின்றன..

ஆடி மாதம் என்பதால் சூறைக்காற்றும் சுழன்றடிக்க ஆபத்தை உணராமல் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்

அத்துடன் அப்பகுதியில் நீர் வரத்தை சரிவர கணிக்க முடியவில்லை என்பதால், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையே நீடித்து வருகிறது....

ஒரு டிரிப்புக்கு 50 பேர் என்ற கணக்கில், நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வரை இந்த ஆபத்தான பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்..

நடு ஆற்றில் படகு சிக்கினால் அதனை மீட்பது அவ்வளவு எளிதல்ல என அறிந்திருந்தும், எவ்வித பாதுகாப்புமின்றி பரிசல் இயக்கப்படுகின்றன..

சாலை மார்க்கமாக சேலம் மாவட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டால் 60 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டிய சூழல் இருப்பதால், பல ஆண்டுகளாக பாலம் அமைக்க கோரி வலியுறுத்தி வந்தனர் பொதுமக்கள்...

இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கும் சூழலில், இதுவரை பாலம் கட்டும் பணிகள் தொடங்கிய பாடில்லை..

அன்றாடம் பணிக்காக செல்லும் மக்கள், 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வதற்கு பதிலாக, ஆபத்தான 6 கிலோ மீட்டர் பரிசல் பயணம் மேற்கொள்வதே மேல் என தங்கள் தரப்பை நியாயப்படுத்துகின்றனர்...

ஆனால், நகரும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்ற சூழலில், மக்களின் உயிரை பணயம் வைத்து ஒப்பந்ததாரர்கள் பரிசல் பயணம் மேற்கொண்டு கல்லா கட்டி வரும் சூழலில், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? என கொதித்தெழுகின்றனர் சமூக ஆர்வலர்கள்..

இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, பாலம் கட்டும் பணிகளையும் உடனடியாக தொடங்க அரசு முன் வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்