இயற்கை அளித்த கொடை.. ஒகேனக்கலில் மாறிய நிலைமை | Hogenakkal | Thanthitv
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், 22 ஆயிரம் கன அடியாக தற்போது உயர்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
Next Story