பெண் அதிகாரியை சிறைப்பிடித்த இந்து முன்னணியினர் - வேலூரில் பரபரப்பு
வேலூரில், கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் துறை பெண் அதிகாரியை சிறைப்பிடித்து இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை முழுவதும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில், பிரசாத பொருட்களை வைக்க, 5 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகத்துக்கு தொல்லியல் துறை அறைகளை வழங்கி உள்ளது. இந்நிலையில், அந்த அறைகள் பழுதடைந்து உள்ளதால் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, மீண்டும் தொல்லியல் துறை அந்த அறைகளை காலி செய்யச் சொன்னதாக தெரிகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் காலி செய்யாத நிலையில், இதுகுறித்து தொல்லியல்துறை பராமரிப்பு உதவியாளர் அகல்யா, கேட்டபோது, கோயில் நிர்வாகிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story