குலைநடுங்க விடும் தொடர் என்கவுண்டர்கள்.. ஐகோர்ட்-க்கு வலுக்கும் கோரிக்கை

x

தொடர் என்கவுன்டர்கள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு 3 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரவுடி சீசிங் ராஜாவை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்காக அழைத்து வந்ததாகவும், தற்போது வேறொரு வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறுவதால் போலீஸ் மீதான நம்பிக்கை குலைந்து விடுவது போல் உள்ளதாக தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 16 வது என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், என்கவுண்டர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் என்றும், என்கவுன்டர் தொடர்பான ஆதாரங்களை போலீசார் அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்