என்கவுன்ட்டர்கள்..கொதித்தெழுந்த கோர்ட்... . ``போலீசாரை விசாரிக்க உத்தரவு..'' | High Court

x

குற்ற வழக்குகளில் உடனடி மரணம் என்பது சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது அல்ல என, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக முருகனின் தாயார் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயல்வதும், போலீசார் அவர்களை என்கவுன்ட்டர் அல்லது துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பதும் வழக்கமாகி வருவதாக தெரிவித்தார். உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது அல்ல என்றும், என்கவுன்ட்டர் மரணங்கள் அடிப்படை தவறு, பிற்போக்கு சிந்தனை என்பதை உணராமல் உடனடியாக பாராட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க நினைக்கும் போது கை, கால்களை உடைத்துக்கொள்வது வழக்கமாகி வருவதாகவும், என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கின் விசாரணையை நடத்தி 6 மாதத்தில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்