செந்தில்பாலாஜிக்கு எதிராக... அதிமுக நிர்வாகி விவகாரத்தில் கறாராக சொன்ன ஹைகோர்ட்

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிர்மல் குமாருக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நிர்மல் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்