"வழக்கு தீர..வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு தேவை" - ஐகோர்ட் நீதிபதி பேச்சு

x

"வழக்கு தீர..வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு தேவை" - ஐகோர்ட் நீதிபதி பேச்சு

விபத்து, பாகப்பிரிவினை உள்ளிட்ட வழக்குகளில், தாமதமின்றி, நிவாரணம் கிடைப்பதற்கு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு முதன்மை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டார். நாமக்கல்லில் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய நீதிமன்றம்,

திருச்செங்கோடு கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு வழக்குகளில் விரைவாக தீர்ப்புகள் வழங்கவும், நிவாரணம் கிடைக்கவும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்