"ஏப்.17" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு | Chennai HC

x

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, 3ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பதை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் 3ம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து கொள்கை முடிவை விரைவாக எடுக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்