ஐகோர்ட் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மேகாலயா தலைமை நீதிபதியாக நியமனம்

x

வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் 4 நீதிபதிகள், தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவாஸ்தவா, அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி சக்ரதாரி சரண் சிங், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் பீஷ்னோய், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்