முன்னாள் அமைச்சர் வழக்கு.. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த
எம்.சி.சம்பத்த்திற்கும், அவரிடம் உதவியாளராக இருந்த
குமார் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்
வாங்கல் பிரச்சனை ஏற்பட்டடது. 2023இல் எம்.சி.சம்பத்தின் சகோதரர் தங்கமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் குமாரை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால்,
அவரது மாமனார் ராமச்சந்திரன், மாமியாா் ஜோதி ஆகியோரை
தாக்கி, மிரட்டியதாக பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார்
அளிக்கப்பட்டது. தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி எம்.ஜி.சம்பத், ராமச்சந்திரன், குமார், ஜோஜி ஆகியோரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை இவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, நீதிபதி ஜெயசந்திரன் வழக்கை முடித்து வைத்தார்.
Next Story