"உயர் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை" - உறுதியான இரட்டை ஆயுள் தண்டனை

x

தூத்துக்குடி அருகே மனைவி, மகளை கொடூரமாக கொன்ற நபருக்கு, இரட்டை ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மடத்தூரில் கடந்த 2014ல் மனைவி, மகளை கிரைண்டர் கல்லால் அடித்து ஜவுளி வியாபாரி கொலை செய்தார்.

இது தொடர்பாக சிப்காட் காவல்துறை, சங்கரை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மகிளா நீதிமன்றம், சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சங்கர் தரப்பில் கடந்த 2020ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணையை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தார். மனுதாரரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்