"உத்தரவை அமல்படுத்தாத அரசு" ஆயுள் தண்டனை கைதிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court

x

நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாத காரணத்தால் ஆயுள் தண்டனை கைதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாக பாளையங்கோட்டை மத்திய

சிறையில் உள்ள 70 வயதான பால்துரை என்பவர்

அறிவுரை குழும பரிந்துரைப்படி தன்னை

முன்கூட்டி விடுதலை செய்ய கோரிய வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை என

வழக்கு தொடர்ந்தார். இது விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி ஜனவரி 31 தேதிக்குள் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் அதுவரை கால அவகாசம் வேண்டும் எனவும் கோரினார். இதையடுத்து பால்துரைக்கு 2 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்