காற்றுடன் விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை - கடலோர பகுதிகள் பொதுமக்கள் அவதி

x

நாகையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் காரணமாக, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகையில் கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், செருதூர், வாஞ்சூர், உள்ளிட்ட கடலோர பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்